ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பலோசிஸ்தானின் கலாத் மாவட்டத்தின் மாங்கோசார் பகுதியில் நேற்று (ஜன.31) இரவு பயங்கரவாதிகள் சாலைகளை மறிக்க முயன்றதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இன்று (பிப்.1) அதிகாலை வரை தொடர்ந்த இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆனால், இந்த மொத்த தாக்குதலில் 18 பாதுகாப்புப் படையினர் வீர மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இதையும் படிக்க: வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலோசிஸ்தானிலுள்ள பிரிவிணைவாதிகள் பல காலமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் அந்நாட்டு பொது மக்களின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், மற்ற மாகாணங்களை விட அதிக வளம் பெற்றிருந்தாலும் பலோசிஸ்தானில் பெரியளவிலான முன்னேற்றங்கள் ஏதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் ஆட்சி அமைந்ததிலிருந்து பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.