பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
பாகுபலி மீண்டும் திரைக்கு வருகிறது: அக்டோபரில் மறுவெளியீடு!
கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(ஏப். 28) வெளியிட்டுள்ளது.
பாகுபலி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிக்கும் பொருட்டு, அதனை மீண்டும் திரையிட முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் எந்த தேதியில் படம் மறுவெளியீடாகும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.