பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
பாக்கியலட்சுமி தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகும் புதிய தொடர்!
பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இந்தத் தொடருக்கு மாற்றாக மகளே என் மருமகளே என்ற தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி, ரசிகர்களின் விருப்பத் தொடராகவும் உள்ளது. இந்தத் தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்படும் நேரத்தில் புதிய தொடரான மகளே என் மருமகளே என்ற தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமான மகுவா ஓ மகுவா என்ற தொடரின் மறு உருவாக்கமாக மகளே என் மருமகளே என்ற தொடர் எடுக்கப்படுகிறது.
இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்த ரேஷ்மா பசுபுலேட்டி, இத்தொடரில் நேர்மறையான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காதலிப்பதை உறுதிசெய்த விஜய் தேவரகொண்டா... பெயரைக் குறிப்பிடாதது ஏன்?