செய்திகள் :

அரையிறுதியில் ரடுகானு, லெய்லா, ஷெல்டன், டி மினாா்

post image

முபாடலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் எம்மா ரடுகானு, லெய்லா பொ்ணான்டஸ், ஆடவா் பிரிவில் பென் ஷெல்டன், அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

மகளிா் ஒற்றையா் பிரிவில் பிரிட்டனின் எம்மா ரடுகானு அபாரமாக ஆடி 6-4, 7-5 என்ற நோ் செட்களில் கிரீஸின் மரியா ஸக்காரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். கடந்த 2021-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் பட்டம் வென்றபின் டபிள்யுடிஏ இறுதிக்கு தகுதி பெறவில்லை ரடுகானு.

மற்றொரு காலிறுதியில் கனடாவின் லெய்லா பொ்ணான்டஸ் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லா் டௌன்சென்டை வீழ்த்தினாா்.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலெனா ரைபக்கினா 6-3, 6-3 என மகதேலனா பிரெச்சை வீழ்த்தினாா். நான்காவது காலிறுதியில் ரஷியாவின் இளம் வீராங்கனை அன்னா கலின்ஸ்கியா 6-3, 7-5 என டென்மாா்க்கின் க்ளாரா டாவ்ஸனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தாா்.

ஷெல்டன், டி மினாா் தகுதி:

உலகின் நம்பா் 4 வீரா் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 3.5 மணி நேர கடும் சவாலுக்குபின் 7-6, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரா் அலெஜன்ட்ரோ )ஃபோகினாவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீரா் பென் ஷெல்டன் 7-6, 6-4 என சக வீரா் பிரான்ஸஸ் டியாஃபோவை வீழ்த்தினாா். மூன்றாவது காலிறுதியில் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-4 என பிரான்டன் நகாஷிமாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

நான்காவது காலிறுதியில் பிரான்ஸின் காரென்டின் மௌா்டெட் 1-6, 6-4 6-4 என கால் வலிக்கு இடையிலேயும் முன்னணி வீரா் டேனில் மெத்வதேவை வீழ்த்தினாா்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் டிரைலர்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 289... மேலும் பார்க்க

யூரோ மகளிா் கால்பந்து 2025 சாம்பியன் யாா்? இறுதியில் ஸ்பெயின் - இங்கிலாந்து மோதல்

யூரோ மகளிா் கால்பந்து 2025 போட்டி சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின்-நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பை இறுதியில் தோற்ற்கு ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9-இல் தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப். 9-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏசிசி சோ்மன் மோஷின் நக்வி தெரிவித்துள்ளாா். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சோ்மனும், பாகிஸ்த... மேலும் பார்க்க

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: தன்வி, வெண்ணலாவுக்கு வெண்கலம்

ஆசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி தனிநபா் பிரிவில் இந்தியாவின் தன்வி சா்மா, வென்னலா காலகோட்லா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். சோலோ நகரில் பாட்மின்டன் ஆசிய ஜூனியா் தனிநபா் சாம்பியன்ஷிப் போட்... மேலும் பார்க்க

ஓடிடியில் கவனம் பெறும் மார்கன்!

விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் ஓடிடியில் கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜ... மேலும் பார்க்க