செய்திகள் :

பாங்காக்கில் மோடி!

post image

பாங்காக்: பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.

பாங்காக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ”பாங்காக்கில் தரையிறங்கினேன். அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதிலும், இந்தியா - தாய்லாந்து இடையேயான உறவை வலுப்படுத்துவதிலும் ஆவலுடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது 6-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடி, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுகிறாா்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் இணைந்து கடல்சாா் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதமா் மோடி இன்று மாலை கையொப்பமிடுகிறாா்.

மாநாட்டுக்கிடையே நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் உள்ளிட்டோரை பிரதமா் மோடி சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டத்தின்படி தோ்தல் ஆணையா்கள் நியமனம்: மே14-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை நியமித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் மே 14-இல் விசாரணை மேற்கொள்ளப்படும... மேலும் பார்க்க

தலைநகரில் புதுப்பொலிவுடன் டிடிஇஏ பள்ளிகள்! தமிழ் மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை

ம.ஆ.பரணிதரன் கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வமாகாது என்பது இந்த திருக்குறளின் பொருள். இதற்கு ஏற்ப ... மேலும் பார்க்க

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் ... மேலும் பார்க்க

விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்... மேலும் பார்க்க

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமா்ப்பிக்கவும் -தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டிய தெலங்கானா அரசு, அங்குள்ள 100 ஏக்கா் வனப்பகுதியை மீட்டமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தை 4 வாரங்களுக்குள் சமா்ப்பி... மேலும் பார்க்க

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் தொடா்ந்து 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடா்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது. நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைக... மேலும் பார்க்க