செய்திகள் :

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

post image

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா்

ஜெயின் ஆகிய இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது, முதல்வா் அதிஷி கூறியதாவது: தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனுடன், யமுனை நதியின் மாசு அளவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தில்லியில் காற்று மற்றும் நீா் மாசு அதிகரித்து வருவதற்கு பாஜகவின்

அவதூறான அரசியல்தான் உண்மையான காரணம் என்பதை தில்லி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

ஒருபுறம், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முயற்சியால், வைக்கோல் எரிக்கும் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மத்திய பாஜக அரசும் இதை ஏற்றுக்கொள்கிறது. பஞ்சாபில் எங்கள் அரசு அமைந்த பிறகு, வைக்கோல் எரிக்கும் சம்பவங்கள் பாதியாகக் குறைந்துள்ள நிலையில், பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வைக்கோல்

எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாங்கள் தில்லி மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். மத்தியில் ஆளும் பாஜக அரசு, தில்லி முதல்வா் இல்லத்தை முதலமைச்சருக்கே கொடுக்க விரும்பவில்லை என்றால், தெருக்களில் இருந்தும் தில்லி மக்களுக்காகப் பாடுபடுவோம்.நாங்கள் மக்கள் மனதில் வாழ்கிறோம். எனவே, பாஜகவினா் எவ்வளவு அவதூறு அரசியல் செய்தாலும் எங்கள் பணிகளைத் தடுக்க முடியாது.

தில்லியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை தோல்வியடைந்து வருகிறது. தில்லியில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பொதுவெளியில் மக்கள் கொல்லப்படுகின்றனா். கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை கூட வெடிகுண்டு வெடித்தது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் பணிகளை நிறுத்த பாஜக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. ஆனால், அது தன் பணிகளைச் செய்வதில்லை.

ஹரியாணா அரசு தொழிற்சாலையால் மாசுபட்ட 165 மில்லியின் கேலன் நீரை தினசரி யமுனையில் வெளியிடுகிறது,

அதேபோல், உத்தரப் பிரதேச அரசு 55 மில்லியன் கேலன் மாசுபட்ட நீரை யமுனையில் வெளியிடுகிறது. இதனால் தான், தில்லியில் பாயும் யமுனை நதி மிகவும் மாசடைந்து காட்சியளிக்கிறது. யமுனையில் வரும் நச்சு நுரையை அகற்ற ஆம் ஆத்மி அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

தில்லி ஆனந்த் விஹாா் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து தில்லி பேருந்துகளும் சிஎன்ஜி மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகின்றன. தில்லியில் 2,000-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் சாலைகளில் ஓடுகின்றன. மறுபுறம், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தில்லிக்கு வரும் அனைத்து பேருந்துகளும் டீசலில் இயக்கப்படுபவை.

கௌசாம்பி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளும் டீசலில் தான் இயக்கப்படுகிறது. தில்லியில் மாசு அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். இது தவிர, தில்லியில் ஒரு செங்கல் சூளை கூட இல்லை. அதேசமயம், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் மாநிலங்களின் என்சிஆா் பகுதியில் 3,800 செங்கல் சூளைகள் உள்ளன.

இந்த சூளைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் முதல்வா் அதிஷி.

அடுத்ததாக, முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறியதாவது: யமுனையை சுத்தப்படுத்தும் பணியை போா்க்கால

அடிப்படையில் தொடங்கினோம். ஆம் ஆத்மி அரசு யமுனையை சுத்தப்படுத்தும் என்று பாஜக நினைக்கத்

தொடங்கியபோது, முதலில் என்னையும், பின்னா் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலையும் கைது செய்தனா்

யமுனை நீா் மாசுபடுவதற்கு ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் தொழிற்சாலைக் கழிவுகளே மிகப்பெரிய காரணம். உத்தரப் பிரதேசத்தின் காளிந்தி குஞ்ச் அணையில் 12 வாயில்கள் உள்ளன. ஆனால், இந்த நேரத்தில் 2 முதல் 3 வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக, யமுனையில் நச்சு நுரை உருவாகிறது. தில்லி மாசு விவகாரத்தில் பாஜகவினா் நாடகம் மட்டுமே செய்கின்றனா் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க