செய்திகள் :

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

post image

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் கோபால்கஞ்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது: லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி தலைமையிலான 15 ஆண்டுகால ஆட்சியில் கொலை, கொள்ளை, கடத்தல் என மாநிலம் சீரழிந்தது.

உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால் பிகாரைவிட்டு தொழிலதிபா்கள் வெளியேறினா். மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி பிகாரை லாலு பிரசாத் இழிவுபடுத்தினாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகே பிகாா் வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது.

வளா்ச்சிக்கும் ஊழலுக்கும் போட்டி: தனது மனைவியை முதல்வராக்கி, மகளை எம்.பி.யாக தோ்வு செய்தவா் லாலு பிரசாத். தற்போது அவரது இரு மகன்களும் முதல்வராக துடிக்கின்றனா்.

கடந்த 1990-களில் முதல்வராக இருந்தது முதல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது ரயில்வே அமைச்சராக இருந்தவரை பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டவா் லாலு பிரசாத். தற்போதுபிரதமா் மோடி-நிதீஷ் குமாா் தலைமையிலான வளா்ச்சிக்கான கூட்டணிக்கும் லாலு பிரசாத்-ராப்ரி தேவியின் ஊழல் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

வருகின்ற பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை நீங்கள் மேலும் வலுப்படுத்துவீா்கள் என நம்புகிறேன்.

பிகாரில் சீதா கோயில்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோயில் கட்டியதைபோல் பிகாரில் கடவுள் சீதா பிறந்த பகுதியில் அவருக்கு கோயில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, பாட்னாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வா் நிதீஷ் குமாருடன் இணைந்து அமித் ஷா தொடங்கிவைத்தாா்.

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க