செய்திகள் :

'பாஜக தொடர்பு... கட்சியை அழித்துவிட்டார்' - மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கொதிக்கும் கோவை கதர்கள்

post image

கடந்த 20.10.2024 அன்று கோவை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம்' என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், "தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தனது உதவியாளரான கருப்பசாமிக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. உண்மை தொண்டர்களை புறக்கணித்து வருகிறார். கட்சியின் மீது ஈடுபாடு இல்லாத நபர்களை பதவிக்கு கொண்டுவருகிறார். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுகிறார்.

ஆலோசை கூட்டம்

தலைவர் ராகுல் காந்திக்கு துரோகம் விளைவிக்கும் செயல்களை அரங்கேற்றி வருகிறார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் 2011, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு மூன்று முறையும் தோல்வி அடைந்தார். கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்டம் காண வைக்கிறார். எனவே அவரை உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மயூரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லிக்கும் புகார் கடிதங்களை அனுப்பியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோயம்புத்தூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமார், "ஒருகாலத்தில் கோவை காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. குப்புசாமி, பிரபு போன்றவர்கள் எம்.பி-க்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் சைலெண்டானா பிறகுதான் மயூரா ஜெயக்குமாரின் ஆட்டம் அதிகரித்து விட்டது. தலைவர்களை கையில்போட்டு கொண்டு இளைஞர்கள் காங்கிரஸ் தலைவர், மாவட்ட தலைவர், செயல் தலைவர் போன்ற பதவிகளை தனதாக்கிக் கொண்டார். இந்த சூழலில்தான் தனது உதவியாளரான கருப்பசாமி என்பவருக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் பி.எஸ். சரவணகுமார், செல்வராஜ், ராதாகிருஷ்ணன் என பலர் பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்யும் தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

ஆலோசனை கூட்டம்

அவர்களில் ஒருவரைத்தான் மாவட்ட தலைவராக நியமித்திருக்க வேண்டும். இதற்கு டெல்லி லாபி மூலமாக மயூரா முட்டுக்கட்டை போட்டுவிட்டார். கருப்பசாமி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முக்கிய நிர்வாகிகளை அழைப்பதில்லை. சமீபத்தில் கூட தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பா.ஜ.க-வினர் பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்கு கூட எங்களை அழைக்கவில்லை. இதற்கு மயூராவின் தூண்டுதல்தான் காரணம். இதுபோல பல விஷயங்களை எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். கடத்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் எங்களை அழைக்காமல் தனியாக சென்று ஒட்டு கேட்டார்கள். கோவையில் பா.ஜ.க வளர்ந்து வரும் சூழலில் காங்கிரஸின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அகில இந்திய தலைமை இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய கோயம்புத்தூர் சீனியர் கதர்கள், "மயூரா கடந்த 2000-ம் ஆண்டுதான் காங்கிரஸுக்கு வருகிறார். பிறகு கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன் இருந்த காலகட்டத்தில் அவருடன் நெருக்கம் காட்டுகிறார். அதன் மூலமாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்கிறார். அந்த பதவிக்கு கார்த்தி சிதம்பரம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தார். வாசனின் ஆதரவு இருந்தால் மயூராவுக்குத்தான் பதவி கிடைக்கிறது. இப்படி கார்த்திக்கு எதிராக வேலை செய்தவர், பின்னாளில் அவருடன் இணைந்து கொண்டார். அதில் சிங்காநல்லூர் தொகுதியில் மயூரா போட்டியிட கார்த்தி சீட் பெற்று கொடுக்கிறார். சரியாக வேலை செய்யாததால் தோல்வியடைந்தார். இதற்கிடையில் முகுல் வாஸ்னிக்குடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.

சத்தியமூர்த்தி பவன்!

அதன் மூலமாக 2016 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கிறது. இதிலும் மயூராவுக்கு தோல்விதான் கிடைக்கிறது. 2021 தேர்தலின்போதும் கோவை தெற்கில் நின்றும் தோல்விதான் கிடைத்தது. அப்போது வானதி, கமலஹாசன் களத்தில் இருந்தார்கள். எனவே தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சீட் கொடுங்கள் என பலமுறை சொல்லி பார்த்தோம். ஆனால் கட்சி தலைமை செவி கொடுத்து கேட்கவில்லை. இதன் விளைவு கோவையில் தி.மு.க-வே போட்டியிடுவதாக சொல்லிவிட்டது. இந்த சூழலில்தான் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மூலமாக தொடர்பை வளர்த்துக் கொள்கிறார். இதன் மூலமாக கோவை மாநகர் மாவட்ட தலைவராக வருகிறார். பின்னர் தலைவராக வந்த கே.எஸ்.அழகிரியின் உதவியுடன் செயல் தலைவராகிறார். அதிலிருந்து தேசிய செயலாளராகவும் ஆகிவிடுகிறார். இப்படி உழைக்காமலேயே பதவிகளுக்கு வருகிறார். கோவையில் பா.ஜ.க வளர்வதற்கு மயூராவின் செயல்பாடுதான் முக்கிய காரணம். அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். எனவே மயூரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இறுதியாக குற்றச்சாட்டுக்கள் குறித்து மயூரா ஜெயக்குமாரிடமே விளக்கம் கேட்டோம், "நான் கட்சியில் தேசிய செயலாளராகவும், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் இருக்கிறேன். நான் வேலை செய்கிறேனா இல்லையா என்பது கர்நாடக காங்கிரஸ் அல்லது அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் எனக்கு எதிராக மாவட்ட, மாநில காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. சம்மந்தமே இல்லாமல் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சூலூர் மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் பகவதியும் என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். யாருடையவோ தூண்டுதலில்தான் இது நடந்துள்ளது. எந்த பிரச்னையாக இருந்தாலும் தலைமைக்குதான் புகார் அளிக்க வேண்டும். தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றுவது ஒழுங்கீனமற்ற செயல். இதுகுறித்து தலைமைக்கு புகார் அளித்திருக்கிறேன். நான் உண்மையான காங்கிரஸ் தொண்டன். எனவே பா.ஜ.க-வுடன் தொடர்பு வைத்திருக்கிறேன் என சொல்வது முட்டாள் தனமான பேச்சு. கருப்பசாமி பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார். அவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு பதவி கிடைத்துவிட்டது என்கிற பொறாமையில் பணக்காரர்கள் எல்லாம் இப்படி செய்கிறார்கள்" என்றார்.

தேசிய அளவிலோ, மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ... காங்கிரஸையும் கோஷ்டி பூசலையும் பிரிக்கவே முடியாது போல என காங்கிரஸ் கட்சியினர் வேதனை தெரிவிக்கிறார்கள்.!

தாராவியின் கதை: குடிசைகளை கோபுரமாக்க அடுத்தடுத்து டெண்டர்; களத்தில் இறங்கிய அதானி | பகுதி 4

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொ... மேலும் பார்க்க

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?

நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இட... மேலும் பார்க்க

Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை

நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க