செய்திகள் :

பாஜக: புதுச்சேரி, மகா. உட்பட 9 மாநிலங்களுக்குப் புதிய தலைவர்கள்; தேசியத் தலைவர் தேர்தல் எப்போது?

post image

பா.ஜ.க-விற்குத் தேசியத் தலைவர் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. ஏற்கெனவே பா.ஜ.க-விற்கு 28 மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

பா.ஜ.க தேசியத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் 19 மாநில பா.ஜ.க தலைவர்கள் தேவை. தற்போது 28 மாநிலத்திற்குத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால் புதிய தேசியத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

ஆனால் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்ட பிறகுதான் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரவீந்திர சவான்
ரவீந்திர சவான்

தற்போது 9 மாநில பா.ஜ.க தலைவர்கள் பட்டியலைக் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க தலைவராக வி.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

ஏற்கனவே தமிழகத்திற்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரிக்கும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவராக ரவீந்திர சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நான்கு முறை எம்.எல்.ஏ.வாகவும், மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். அதோடு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மாநில பா.ஜ.க செயல் தலைவராகவும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருக்கிறார்.

மத்தியப்பிரதேச பா.ஜ.க தலைவராக ஹேமந்த் கண்டேல்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாநில முதல்வர் மோகன் யாதவிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மகேந்திர பட் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ராஜீவ் பிந்தால் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 5 முறை எம்.எல்.ஏவாக இருக்கும் ராஜீவ் பிந்தால் மூன்றாவது முறையாக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அமைச்சராகவும், சபாநாயகராகவும் ராஜீவ் செயல்பட்டு இருக்கிறார். ஆந்திராவிற்குப் புதிய தலைவராக வி.என். மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவிற்கு ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``செவி வழி செய்தியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது.." - சீமான் குறித்து மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பதற்கு கடன் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து சங்கங்களையும்... மேலும் பார்க்க

"மதுரைக்குப் போகாமலேயே முருகர் அருள் கிடைத்துவிட்டது" - வேலைப் பரிசாக வாங்கிய இபிஎஸ் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பரிவு தேசிய பொதுச் செயலாளர் வி.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் ... மேலும் பார்க்க

சிவசேனா தொடக்கத் தினம்: "என்னை வந்து சாகடியுங்கள்" - வார்த்தை போரில் உத்தவ் - ஷிண்டே; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா தொடக்கத் தினம் சிவசேனாவின் இரண்டு அணிகள் சார்பாகக் கொண்டாடப்பட்டது.தனித்தனியாக நடந்த பொதுக்கூட்டங்களில் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பாமக MLAகள்: "உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடையக் கூட்டுப் பிரார்த்தனை" - அன்புமணி

பா.ம.க உட்கட்சி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இதனால் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாக... மேலும் பார்க்க

``NDA கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை EPS தான் முடிவு செய்வார்" - கே.பி.ராமலிங்கம்

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்தார். `நடந்தாய் வாழி காவிரி' திட்டம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி... மேலும் பார்க்க

``பணி நேரம் முடிந்து விட்டது'' - ஏக்நாத்ஷிண்டே வந்த விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் அருகில் உள்ள மத ஊர்வலகத்தில் கலந்து கொண்டுவிட்டு மும்பைக்கு திரும்ப தயாரானார். அவர் மும்பையில் இருந்து ஜல்காவிற்கு புறப்பட தயாரானபோது அவரது விமானத்தில்... மேலும் பார்க்க