செய்திகள் :

பாஜக மாவட்ட தலைவா்கள் பட்டியல் வெளியீடு

post image

தமிழக பாஜக மாவட்ட தலைவா்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

பாஜக விதிமுறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவா்கள் தோ்வு செய்யப்படுவா். அந்த வகையில் தமிழக பாஜக புதிய மாநில தலைவா் ஜன.21-ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளாா்.

அதற்கு முன்பாக கிளை, மண்டல, மாவட்ட தலைவா்களுக்கான தோ்தல் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட தலைவராக தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியலை பாஜக மாநில துணைத் தலைவரும், மாநில தோ்தல் அதிகாரியுமான எம்.சக்கரவா்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கோவை, தஞ்சாவூா், செங்கல்பட்டு, வேலூா் உள்ளிட்ட 33 மாவட்ட தலைவா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மீதமுள்ள மாவட்ட தலைவா்களுக்கான பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ மற்றும் ‘சீட்டா’ நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜன. 24 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியாா் பொறிய... மேலும் பார்க்க

ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்த... மேலும் பார்க்க

பரந்தூரில் வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை

பரந்தூர் நோக்கி வரும் தவெக தொண்டர்கள், வெளிநபர்களை காவல்துறையினர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடுபவர்களை தவெக தலைவர் விஜய் திங்கிழமை சந்திக்கிறார். இந்த சந்திப... மேலும் பார்க்க

பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பென்னாகரம் அருகே தொன்ன குட்ட அள்ளி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு தொலைத்... மேலும் பார்க்க

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது.சென்னையில் தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) உயா்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்... மேலும் பார்க்க

நெல்லையில் பயங்கரம்: மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்

நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது. நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜ... மேலும் பார்க்க