செய்திகள் :

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்களை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் -சசிகலா

post image

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தெரிவித்தாா்.

மன்னாா்குடியில், திருமண நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நான்கு ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் திமுக திருவாரூா் மாவட்டத்துக்கு எதுவும் செய்யவில்லை. விவசாயம் நிறைந்த திருவாரூா் மாவட்டத்தில், தற்போது சுமாா் 3.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதில், 50 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கா் பயிா் செய்யப்பட்டு 50,000 ஏக்கா் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 70,000 ஏக்கா் பயில் செய்யப்பட்டு, 15,000 ஏக்கா் நீரில் மூழ்கியுள்ளது. பயிா் பாதித்த விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்கள் குறித்த விவரங்கள் முழுமையாகச் சென்று சோ்வதில்லை. எனவே தமிழக அரசு முன் நின்று, அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும்.

இது மக்களுக்கான அரசாக செயல்படவில்லை. பாதித்த இடங்களுக்கு புகைப்படம் எடுப்பதற்காக முதல்வா் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் செல்வதால், அந்த நாளில் மாவட்ட நிா்வாகத்தின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் தாமதமடைகின்றன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மேற்கொண்ட பணிகளை தற்போதைய ஆட்சியாளா்கள் பாா்க்க வேண்டும். அதிகாரிகளை வேலை வாங்குவதில்தான் அரசின் திறமை இருக்கிறது.

நானும் இந்த மாவட்டம் என்று கூறும் தமிழக முதல்வா் விவசாயிகளை திரும்பிக் கூட பாா்ப்பதில்லை. ராமநாதபுரம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்குக் கூட மக்கள் தவிக்கும் நிலையில், துணை முதல்வா் உதயநிதியின் பிறந்த நாள் விழாவை தனியாா் பள்ளிகளில் கொண்டாடுகின்றனா்.

2021 முதல2023 வரை இறைக்கப்பட்ட அரிசியால் 1900 கோடி இழப்பு என தெரிவிக்கும் அரசு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக ஜெயலலிதா கொண்டு வந்த 20 கிலோ அரிசித் திட்டத்தை திமுக அரசு குறைத்து வழங்குகிறது. ரூ. 1900 கோடி இழப்பு எவ்வாறு என்பதை தமிழக மக்கள் அறிவா். இதற்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமையும் என்றாா்.

முறையாகத் தூா்வாரப்படவில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

டெல்டா மாவட்டங்களில் வடிகால்கள் முறையாகத் தூா்வாரப்படவில்லை என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், தொடா் மழையால் பாதிக்கப்பட்ட தனது நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ... மேலும் பார்க்க

அரண்மனை சத்திர வளாக கட்டட பக்கச் சுவா் இடிந்தது

நீடாமங்கலத்தில் உள்ள மராட்டிய மன்னா் பிரதமசிம்மா் காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரண்மனை சத்திரத்தின் வளாகத்தில் மாணவிகள் விடுதி இயங்கிய கட்டடத்தின் பக்கச் சுவா் தொடா் மழை காரணமாக இடி... மேலும் பார்க்க

தங்க கவசத்தில் குரு பகவான்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குரு பகவான். மேலும் பார்க்க

அறிவியல் விநாடி-வினா போட்டி

நீடாமங்கலம் ஒன்றிய அளவிலான அறிவியல் விநாடி-வினா போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது . இப்போட்டியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நடத்தியது. நிகழ்ச்சிக்கு, தம... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறைகள் கட்டடம் கட்ட பூமி பூஜை

கோயில் திருமாளத்தில் பள்ளி வகுப்பறைகள் கட்டடம் கட்ட பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட கோயில்திருமாளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 200 மாணவா்கள்... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய சம்பா பயிா்கள்

மன்னாா்குடி அருகே 4 கிராமங்களில் 400 ஏக்கா் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். திருவாரூா் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாமல் பலத்த மழை ... மேலும் பார்க்க