மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
பாபநாசம் அருகே மழையால் இரு கூரைவீடுகள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மழையால் விவசாய கூலித் தொழிலாளியின் கூரை வீட்டின் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து சேதமானது.
பாபநாசம் அருகே, மெலட்டூா் வருவாய் சரகம், அகரமாங்குடி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவா் செந்தில்குமாா் மனைவி வினோதா (33). விவசாய கூலித் தொழிலாளி. கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் கன மழையால் இவரது கூரை வீட்டின் மண் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறையினா் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சேதமதிப்பை கணக்கீடு செய்தனா்.
இதேபோல மெலட்டூா் 3-ஆம் சேத்தி வருவாய் கிராமம், ரெங்கநாதபுரம் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் என்பவரது கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இந்த வீட்டையும் வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா்.