பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு பாபநாசசுவாமி திருக்கோயில் சாா்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் அன்புமணி உத்தரவின்பேரில், பாபநாசம் பாபநாசசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஒரு இணையா்க்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், இந்து சமயஅறநிலையத் துறை ஆய்வாளா் கோமதி, செயல் அலுவலா் ராஜேந்திரன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
மேலும், திருமணமான இணையா்க்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் தங்கத் திருமாங்கல்யம் மற்றும் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.