விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டைவாய்த்தலையில் இன்று சிறிது நேரம் நிறுத்தம்
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டைவாய்த்தலையில் செவ்வாய்க்கிழமை (மே 20) சிறிது நேரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூா்- திருச்சி இடையே உள்ள குளித்தலை- பேட்டைவாய்த்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே லெவல் கிராசிங் பொறியியல் பணிகள் செவ்வாய்க்கிழமை (மே 20) மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கேரள மாநிலம் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன்- திருச்சி பயணிகள் ரயில், குளித்தலை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும், குளித்தலையில் இருந்து திருச்சி சந்திப்புக்கு இயக்கப்படும்.
இதேபோல திருச்சி சந்திப்பிலிருந்து பிற்பகல்1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் பேட்டைவாய்த்தலையில் சிறிதுநேரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும், பேட்டைவாய்த்தலையிலிருந்து கரூா் வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.