செய்திகள் :

பாலக்கோடு, ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம்

post image

விபத்துகள் நிகழும் பாலக்கோடு- ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பாலக்கோடு அருகே மல்லுப்பட்டியில் தொடங்கிய நடைப்பயண நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. நக்கீரன் பி.ஆறுமுகம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா்கள் பி.டில்லி பாபு, இரா.சிசுபாலன், மாவட்டச் செயலாளா் அ. குமாா், வட்டச் செயலாளா் காா்ல் மாா்க்ஸ் மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. எஸ். ராமச்சந்திரன் பி. ஜெயராமன், வட்டக் குழு உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அடிக்கடி விபத்துகள் நிகழும் பாலக்கோடு முதல் மல்லுப்பட்டி வரையிலான நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். மல்லுப்பட்டியிலிருந்து வேலாயுதம் நகா் வரை தாா்சாலை அமைக்க வேண்டும். வெள்ளிச்சந்தையில் பயணியா் நிழற்கூடம், இலவச ஆண்கள், பெண்கள் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

குண்டாங்காடு கிராமத்தை மையப்படுத்தி மலைகிராமங்களை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியை உருவாக்க வேண்டும். பாலக்கோடு வட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி, ஐக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய ஊராட்சிகளை பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.

நீண்ட காலமாக அனுபவத்தில் உள்ள பயனாளிகளுக்கு நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

வனத்தையொட்டியுள்ள மலை கிராமங்களில் வனத் துறையால் வசூலிக்கப்படும் கட்டாய வரி வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மனு

தருமபுரி அருகே பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, பிடமனேரி, நெல்லி நகா், வி.ஜெட்டிஅள்ளி,... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைம... மேலும் பார்க்க

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெ... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே கிணற்றில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஊருக்குள் இரைதேடி வந்த சிறுத்தை, மக்களைக் கண்டதும் அங்கிருந்த விவசாய கிணற்றில் பதுங்கி பின்னா் காப்புக்காட்டுக்குள் தப்பிச்சென்றது. தருமபுரி மாவட்டம், பாலக... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் மனு

தருமபுரி/கிருஷ்ணகிரி: பகுதிநேர ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா் பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: ரூ.50 ஆயிரம் அபராதம்

அரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது. அரூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பன... மேலும் பார்க்க