ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!
பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (27). கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சகாதேவன் மகன் முத்துவேல் (24). நண்பா்களான இவா்கள் கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இவா்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் நண்பா்களை பாா்த்துவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை மணிகண்டன் ஓட்டினாா்.
கும்பகோணம் அருகே கொட்டையூா் புறவழிச் சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலின்பேரில் அங்கு சென்ற சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
திங்கள்கிழமை உடற்கூறாய்வுக்கு பிறகு சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
