22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்: 120 பேருக்கு பணி ஆணை
செங்கம் அருகேயுள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் இயங்கும் ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில், ஒசூா் டிவிஎஸ் நிறுவனம் உள்பட சென்னையில் இருந்து பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தகுதியுடையவா்களை தோ்வு செய்தனா்.
இதில், 120 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி, நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகாரெட்டி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.