நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தேசிய அளவிலான வன்முறைக்கு எதிரான பிரசார பேரணியை ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பேரணியில் மகளிா் சுய உதவிக் குழுவினா், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையை தடுப்போம், குழந்தை தொழிலாளா் முறையை தடுப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின வன்முறைக்கு எதிராக குரலெழுப்புவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு சென்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் வரை சென்றது. முன்னதாக, ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் எத்தகைய பாகுபாடுமின்றி வளா்போம் என்ற பாலின வன்கொடுமைக்கு எதிரான பிரசார உறுதிமொழி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனா்.
தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் கூடுதல் இயக்குநா் முத்து மீனா, மகளிா் திட்ட இயக்குநா் முருகேசன், உதவி திட்ட அலுவலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.