செய்திகள் :

பாலிவுட் நடிகர் கொலை; நண்பர்கள் செய்த கொடூரம்; பெற்றோர் புகார்

post image

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் ரோஹித் பாஸ்ஃபோர். மும்பையில் வசித்து வந்த ரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்கு சென்றார். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் சிலருடன் கர்பங்கா வனப்பகுதியில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றார். பிற்பகலில் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. அவரை மொபைல் போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரின் நண்பர்கள் ரோஹித் பெற்றோருக்கு போன் செய்து, ரோஹித் நீர்வீழ்ச்சியில் விழுந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உறவினர்கள் மாநில ரிசர்வ் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ரிசர்வ் போலீஸார் ரோஹித்தை மீட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். ரோஹித்தை அவரது நண்பர்கள் சிலர் அடித்து கொலை செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை - Murder (Representational Image)

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில்,''கார் பார்க்கிங் தொடர்பாக 3 பேர் ரோஹித்துடன் சண்டையிட்டனர். அப்போது ரோஹித்திற்கு மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தான் திட்டமிட்டு வெளியில் அழைத்து சென்று கொலை செய்துவிட்டனர்''என்று தெரிவித்தனர். ஜிம் பயிற்சியாளர் அமர்தீப் என்பவர்தான் ரோஹித்தை வெளியில் அழைத்து சென்றதாகவும், வெளியில் சென்ற இடத்தில் ரஞ்சித், அசோக், தரம் ஆகியோர் அடித்துக் கொலைசெய்து நீர்வீழ்ச்சியில் தூக்கிப்போட்டுவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் கூறுகையில்,''ரோஹித் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் தலை, முகம் உட்பட உடம்பு முழுக்க காயம் இருக்கிறது. கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதில் தொடர்புடைய நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம்''என்று தெரிவித்தார். ரோஹித் பேமிலி மேன் வெப் சீரிஸ் சீசன் 3 ல் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

`என் சிறுநீரகத்தை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்' - நடிகர் பரேஸ் ராவல்

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது க... மேலும் பார்க்க

"கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை" - நடிகர் நானா படேகர் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் நானா படேகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். 72 கோடிக்குச் சொத்துக்கள் இருக்கின்றன.ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். புனே அருகி... மேலும் பார்க்க

Homebound: முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் இணையும் Martin Scorsese!

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின்ஸ்கார்செஸி, இந்திய சினிமா இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்பட்டத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பங்களித்துள்ளார். நீரஜ் கைவானின்... மேலும் பார்க்க

மும்பை: மன்னத் பங்களாவைக் காலி செய்த ஷாருக்கான்; கவலையில் உள்ளூர் வியாபாரிகள்; காரணம் என்ன?

மன்னத் பங்களாபாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திராவில் உள்ள தனது மன்னத் பங்களாவிலிருந்து சமீபத்தில் காலி செய்துவிட்டு அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு... மேலும் பார்க்க

Coolie - War 2: `சாரி சாரி, என் தவறுதான்..!’ - ரஜினி குறித்து ஹிருத்திக் ரோஷன் சொன்ன ஃப்ளாஷ்பேக்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில்... மேலும் பார்க்க

Urvashi Rautela: `பத்ரிநாத்தில் எனக்கு கோயில்' - நடிகையின் பேச்சால் மதகுருக்கள் கோபம்; என்ன நடந்தது?

உத்தராகாண்டில் தனது பெயரில் கோவில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா கூறியதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. பத்ரிநாத் பகுதியில் வசிக்கும் மக்கள், சமய அதிகாரிகள் மற்றும் மத குருக்கள் இதற்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க