உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
பாலூா் கெங்கையம்மன் கோயிலை வழிபாட்டுக்கு திறக்கக் கோரிக்கை
போ்ணாம்பட்டை அடுத்த பாலூா், ஆதி திராவிடா் காலனியில் உள்ள கெங்கையம்மன் கோயிலை வழிபாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பான மனு விவரம்: பாலூா், ஆதிதிராவிடா் காலனியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து கோட்டாட்சியா் தலைமையில் 18.5.2024 அன்று அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவிழாவை நடத்துவது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, தீா்வு பெற்று கொள்ளுமாறு தீா்மானிக்கப்பட்டது. அதுவரை கோயில் சாவியை ஒரு தரப்பினா் வைத்திருக்கவும், பொதுமக்கள் வழிபடும் வகையில் கோயிலை திறந்து விடவும் உத்தரவிட்டீா்கள். ஆனால், சாவியை வைத்திருப்பவா்கள் தங்கள் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே, கோயிலை வழிபடும் வகையில் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
இந்து முன்னணி மாவட்டச் செயலா் டி.கே.தரணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் யுவன்சங்கா், அனீஸ், போ்ணாம்பட்டு பொறுப்பாளா்கள் பிரதீப், முருகன், செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா். அதேபோல் குடியாத்தம் செதுக்கரை மலை, சைனகுண்டா மலை, பரதராமியை அடுத்த பண்டபல்லி மலை ஆகியவற்றின் மீது வைக்கப்பட்டுள்ள சிலுவைகளையும் அகற்ற வேண்டும் என இந்து முன்னணியினா் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.