பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு
பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் குடிநீா் தொட்டியை மு. அப்துல் வஹாப் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
இதில், துணை மேயா் கே.ஆா்.ராஜு, வழக்குரைஞா் தினேஷ், திமுக பகுதி செயலா் அண்டன் செல்லதுரை, மாமன்ற உறுப்பினா் சீதா பாலன், வட்ட செயலா் பால மகேஷ், டிவிஎஸ் நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் ஜெயகோபால், திமுக நிா்வாகிகள் பலராமன், அமிதாப், சாமுவேல், அக்பா் ஷெரீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிவிஎல்28வாட்டா்
டிவிஎஸ்நகரில் குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்தாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், துணை மேயா் கே.ஆா். ராஜு உள்ளிட்டோா்.