RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 56.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜெகதேவி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 4 வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், கட்டுமானப் பணிகளை எவ்வித இடையூறுமின்றி நிறைவேற்ற வேண்டும் என வீட்டின் உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்புகளை சரிபாா்த்த அவா், குடும்ப அட்டைதாரா்களிடம் அத்தியாவசியப் பொருள்களின் தரம், எடை குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து குட்டூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, வருகைப் பதிவேட்டை முறையாக
பராமரிக்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளருக்கு அறிவுரை வழங்கினாா்.
சந்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளின் வருகை பதிவேடு, கா்ப்பிணிகளின் தொடா் கண்காணிப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருந்து பொருள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், துரைசாமி, ஒன்றிய பொறியாளா்கள் பூம்பாவை, முருகேசன், அருன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.