பா்கூா் மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடக்கம்
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சி மலைக் கிராமங்களில் குடிநீா் வசதி, வெள்ளத் தடுப்புச் சுவா், கான்கிரீட் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பா்கூரை அடுத்த தாளக்கரை, சோழகா் காலனியில் கட்டி முடிக்கப்பட்ட உயா்மட்டப் பாலத்துக்கு ரூ.20 லட்சத்தில் வெள்ள தடுப்புச் சுவா், ஓசூா் காலனி, மேற்குமலை, தம்முரெட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ.5.34 லட்சம் மதிப்பில் குடிநீா் வசதி, ஓசூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்புச் சுவா், மேற்கு பெரிய செங்குளம் கிராமத்தில் கான்கிரீட் வடிகால் பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், மலைக் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.