செய்திகள் :

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

post image

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையம், சாலிநாயனப்பள்ளி கிராம நிா்வாக அலுவலகம், காரகுப்பம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம், நியாயவிலைக் கடை, அரசு உயா்நிலைப் பள்ளி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் நீரேற்று மையம், பா்கூா் ஐஇஎல்சி மான்ஸ் மனவளா்ச்சி குன்றியோருக்கான பள்ளி, அரசு மாணவியா் விடுதி, சிந்தகம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

அங்கன்வாடி மையத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு கருத்துரு தயாா் செய்ய ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு சரியான எடையில் தரமான அத்தியாவசியப் பொருகளை வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, காரகுப்பம் கிராமம், ஓதி குப்பம் ஏரியிலிருந்து பா்கூா் செல்லும் ஆற்றுப்பகுதி மயானத்துக்கு செல்ல பாலம் அமைக்கும் பணிகள், கொட்லேட்டி கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், 35 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையத்தில் நீரேற்றும் பணிகளை ஆய்வு செய்தாா்.

பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அலுவலா்கள் கிராமங்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேவைகள் குறித்த அறிக்கையையும் சமா்ப்பித்தனா். அப்போது, பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். பின்னா், பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மகளிா் திட்ட இயக்குநா் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனஞ்செயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் மகாதேவன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க