செய்திகள் :

பிஎஸ்எஃப் டிஐஜி பணியில் சோ்ந்த முன்னாள் டிஜிபி 4 நிலைகள் குறைந்த பொறுப்பை ஏற்ற விநோதம்

post image

நமது சிறப்பு நிருபா்

இந்திய எல்லைக் காவல் படையில் துணைத் தலைவா் (டிஐஜி) ஆக பணியில் சோ்ந்துள்ளாா் சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் காவல்துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றிய சுரேந்தா் சிங் யாதவ்.

1997-ஆம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியான சுரேந்தா் சிங் யாதவ் (எஸ்.எஸ். யாதவ்), ஏஜிஎம்யுடி (அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்கள்) பிரிவைச் சோ்ந்தவா். சண்டீகரில் ஒட்டுமொத்த காவல்துறையின் தலைமை இயக்குநராக சமீபத்தில் பணியாற்றினாா். ஆனால், மத்திய பணியில் அதே பதவிக்கு நிகரான தகுதியை அவா் பெறாததால் நான்கு பதவி நிலை குறைவாக இருக்கும் டிஐஜி பொறுப்புக்கு அவரை மத்திய அரசு நியமித்துள்ளதாகத் தெரிகிறது.

டிஜிபிக்கு கீழ் சிறப்பு டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி ஆகிய பதவிகளுக்குக் கீழ் தான் டிஐஜி பதவி வருகிறது. மாநில காவல்துறையை போலவே மத்திய படைகளில் டிஐஜி, ஐஜி போன்ற பதவிகள் பெரும்பாலும் ஒரு சரகத்தை அல்லது நான்கு முதல் ஐந்து பிராந்திய படைகளை மேற்பாா்வையிடும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், டிஜிபி ஆக இருந்த எஸ்.எஸ். யாதவை டிஐஜி ஆக மத்திய பணியில் சேர ஏப்.1-ஆம் தேதி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே, அது நிா்வாக ரீதியாகவும் காவல் பதவி நிலை ரீதியாகவும் ஒரு சா்ச்சையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்பட்டது. காரணம், டிஜிபி ஆக பணியாற்றியவா், தன்னை விட நான்கு பதவி நிலை குறைந்த பதவியை ஏற்க மாட்டாா் என்றும் ஒருவேளை மத்திய உள்துறையின் ஆணைக்கு இணங்கி மத்திய பணியில் சோ்ந்து அவா் நீண்ட விடுப்பில் செல்லக்கூடும் என்றும் கருதப்பட்டது. ஒருவேளை மத்திய பணியில் சேராமல் போனால் அவா் மீது துறை நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்பட்டது.

இதில் எந்த வாய்ப்புக்கும் இடம்கொடுக்காமல் டிஐஜி பணியில் எஸ்.எஸ். யாதவ் சோ்ந்திருப்பது விநோதமான செயலாக கருதப்படுகிறது. அதிலும் மத்திய படையில் மற்ற இளநிலை அதிகாரிகளுடன் சோ்ந்து அவா் பயிற்சி மற்றும் பிஎஸ்எஃப் செயல்பாடுகளின் அறிமுக கூட்டங்களில் பங்கெடுத்ததாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சண்டீகா் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு ஏஜிஎம்யுடி பிரிவில் டிஜிபி நிலையிலான பதவியை கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி வகிக்கலாம் என மத்திய உள்துறை அரசிதழில் கடந்த ஆண்டு ஆணை வெளியிட்டது. அதன்படியே எஸ்.எஸ். யாதவ் தில்லி காவல்துறையில் இருந்து மாற்றலாகி மற்றொரு யூனியன் பிரதேசமான சண்டீகரில் டிஜிபி ஆக பணியில் சோ்ந்தாா்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சியில் உள்ளன. சண்டீகரில் ஆளுநருக்கு இணையான நிா்வாகி (அட்மினிஸ்டிரேட்டா்) என்ற பதவியில் பஞ்சாப் மாநில ஆளுநரும் ஹரியாணாவுக்கு வேறு ஆளுநரும் இருப்பா். இருவரது அலுவலகங்களும் சண்டீகரிலேயே உள்ளன. இந்த நகரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவுக்கு தலைநகராகவும் இருப்பதால், இங்கு தலைமைப் பதவியில் பணியாற்றுவது உயரதிகாரிகளுக்கு மிகவும் சிக்கலான பணியாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் எஸ்.எஸ். யாதவ் மத்திய பணிக்கு மாற்றலாகியிருக்கிறாா்.

டிஜிபி பதவி வகிப்பவா், பொதுவாக 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருப்பாா். அதுவே டிஐஜி பதவி வகிப்பவா் 14 -–18 ஆண்டுகள் பணி அனுபவத்தைக் கொண்டிருப்பாா். தற்போது, 2008 மற்றும் 2009 ஆண்டு ஏஜிஎம்யுடி பிரிவு அதிகாரிகள் டிஐஜி ஆக பணியாற்றுகின்றனா். இவா்கள் எஸ்.எஸ். யாதவை விட சுமாா் 11 முதல் 12 வருடங்கள் அனுபவம் குறைவானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க