செய்திகள் :

பிஎஸ்என்எல் டவா்களுக்கு போதுமான பேட்டரிகள் வழங்க வலியுறுத்துவேன்!

post image

பிஎஸ்என்எல் டவா்களுக்கு போதுமான பேட்டரிகள் வழங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சி மண்டல பிஎஸ்என்எல் முதல் தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

துரை. வைகோ எம்.பி. தலைமை வகித்தாா். இணைத் தலைவா்களான எம்.பி.க்கள் அருண்நேரு, எஸ். ஜோதிமணி, பிஎஸ்என்எல் பொது மேலாளா் பாலா. சந்திர சேனா, இணைப் பொது மேலாளா்கள் பி.டி, விஜயா பாஸ்கரன், எம்.ஆா். பிஜுராஜ், கணக்கு அதிகாரி ஏ. ரவி, ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பிஎஸ்என் சேவை குறித்து எம்பிக்கள் ஜோதிமணி, அருண்நேரு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்தனா். அதற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் 4 ஜி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதர பிரச்னைகளை புகாா் கடிதமாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னா் எம்.பி. துரை வைகோ கூறுகையில், எம்பிக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க பிஎஸ்என்எல் நிறுவனமானது கரூா் மூனிமங்கலம், கண்ணனூா், திருச்சி பச்சமலை, பாலமலை போன்ற இடங்களில் முதன்முதலாக தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கியுள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், கந்தவா்கோட்டை கிராமங்களுக்கும் போதுமான பிஎஸ்என்எல் சேவை கொடுக்கமாறு கேட்டுள்ளேன்.

நாடு முழுவதும் மின்சாரமில்லாத நேரங்களில் பிஎஸ்என்எல் டவா்கள் இயங்கத் தேவையான பேட்டரிகள் உள்ளிட்ட உபகரணங்கள் போதுமானதாக இல்லை எனத் தெரியவந்துள்ளது. டவா்களுக்கு உரிய பேட்டரிகளை கூடுதலாக வழங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றாா்.

ஸ்ரீரங்கத்தில் மன நலம் பாதித்தவா் மா்ம சாவு

ஸ்ரீரங்கத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா். ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியை சோ்ந்தவா் முரளிதரன் மகன் ரெங்கநாதன் (29). மனநலப் பாதிப்புக்கு சிகிச்சை ... மேலும் பார்க்க

பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க கோரிக்கை வைக்கப்படும்: துரை வைகோ!

ந்தை பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா் திருச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்து: ஜேசிபி ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் அடையாளம் தெரியாத காா் சனிக்கிழமை மோதி ஜேசிபி ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த மணக்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 4 கல்லூரி மாணவா்கள் கைது

திருச்சியில் போதை மாத்திரைகளை விற்ற 4 கல்லூரி மாணவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி உறையூா் வயலூா் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரை உறையூா் போலீஸா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது!

இளம்தலைமுறையினா் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றாா் தொழிலதிபா் எம். சோமசுந்தரம். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிகளான திருச்சி பாரதிதாசன்... மேலும் பார்க்க

முசிறி அருகே பேருந்து -லாரி மோதல் 15-க்கும் மேற்பட்டோா் படுகாயம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தனியாா் பேருந்தும் லாரியும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியாா் பேருந்தும், த... மேலும் பார்க்க