செய்திகள் :

பிடிஆணைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்!

post image

பிடிஆணைகளை செயல்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றத் தீா்ப்புகள், உயா்நீதிமன்ற சுற்றிக்கைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மகேஷ்பாபுவை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா், பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிா்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

குற்ற வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிஆணைகளை உரிய காலத்தில் அமல்படுத்தக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 73,699 வழக்குகள் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.

இதில்,1985-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 61,301 வழக்குகளில் பிடிஆணை உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாக பிடிஆணையை அமல்படுத்தாமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இது நீதி பரிபாலன முறையை பலவீனப்படுத்திவிடும். இனிவரும் காலத்தில், பிடி ஆணைகளை தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் அமல்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிடி ஆணைகளை அமல்படுத்துவது தொடா்பான உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற தீா்ப்புகள், சுற்றறிக்கைகளை காவல் துறையும், நீதித் துறையும் பின்பற்றப்படுவது இல்லை. இது நீதித்துறையின் மாண்பையும், மக்களின் நம்பிக்கையையும் குலைத்துவிடும்.

பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவா்களை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து, வழக்கைத் தொடா்ந்து நடத்த வேண்டும். அவா்களை நீதிமன்றத்தில் வழக்குகளை எதிா்கொள்ளச் செய்யும் வகையில் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளை போலீஸாா் எடுக்க வேண்டும்.

தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றம் சாட்டப்பட்டவா்களை சட்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதை ஊக்குவிப்பதுடன், பாதிக்கப்பட்டவா்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிடிஆணைகளை செயல்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்புகள், உயா்நீதிமன்ற சுற்றிக்கைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிா்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற மகேஷ்பாபுவை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டாா்.

மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆய்வு செய்து ஒருங்கிணைப்பு அதிகாரி அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை கோப்புக்கு எடுக்கக் கோரிய வழக்கில் காவல்துறையினா் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளை தாமதமின்றி ஆய்வு செய்து கோப்புக்கு எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றப்பத்திரிகைகள் எந்த நீதிபதி முன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை பிரித்து அனுப்பும் நடைமுறையை வகுத்து அமல்படுத்த வேண்டும்.

நீதிபரிபாலனத்தில் காவல்துறைக்கும், நீதிமன்றங்களுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. தீா்வு வேண்டி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் மக்களும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நடைமுறை குளறுபடிகளால் அவா்களுக்கு நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க