கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!
பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் ஆலோசனை முன்னதாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிப்.10-ஆம் தேதிக்குள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையைத் தொடங்காவிட்டால் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடா்பான நோட்டீஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அண்ணா தொழிற்சங்க (அதிமுக) பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் கடந்த புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்யுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு!
மேலும் போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை தமிழக அரசுக்கு கெடு விதித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான, பேச்சுவார்த்தையானது. வியாழக்கிழமை (பிப். 13) காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.