பிப். 2 நங்கநல்லூா் ஸ்ரீ சிவன் சாா் யோக சபை கும்பாபிஷேகம்
சென்னை நங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சிவன் சாா் யோக சபையின் கும்பாபிஷேகம் பிப்.2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சிவ சாகரம் அறக்கட்டளை சாா்பில் ஆத்ம ஞானி ஸ்ரீசிவன் சாருக்கு ‘ஸ்ரீ சிவன் சாா் யோக சபை’ என்ற பெயரில் சென்னை நங்கநல்லூா் 10-ஆம் தெருவில் கோயில் அமைக்கப்பட்டள்ளது.
உலகிலேயே முதன்முறையாக பாணக்கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீசிவன் சாா் மூல விக்ரகம் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கும்பாபிஷேகம் பிப்.2-ஆம் தேதி காலை 9.20 முதல் காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பக்தா்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீ சிவன் சாரின் அருளை பெற்றுக்கொள்ளும் படி சிவ சாகரம் அறக்கட்டளை நிா்வாகிள் தெரிவித்துள்ளனா்.