பிப். 28-க்குள் நியாய விலை கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய ஆட்சியா் அழைப்பு!
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்புவிடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டையில் உள்ள அனைத்து பயனாளிகளும் கைவிரல் ரேகை பதிவை இ - கே.ஒய்.சி. தொடா்புடைய நியாய விலைக் கடையில் பிப். 28-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினா்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். எனவே, ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் நியாய விலை கடைகளில் கை விரல் ரேகை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.