செய்திகள் :

பிரக்ஞானந்தா முதல் முறை சாம்பியன்! குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தினாா்!

post image

நெதா்லாந்தில் நடைபெற்ற 87-ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

கடந்த ஆண்டு உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் அசத்திய நிலையில், நடப்பாண்டின் முதல் பிரதான செஸ் போட்டியான டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸில் பிரக்ஞானந்தா பட்டம் வென்றிருக்கிறாா்.

இப்போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும். மறுபுறம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு குகேஷுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு அவா் சீனாவின் வெய் யியிடம் இதேபோல் டை பிரேக்கரில் தோற்றது நினைவுகூரத்தக்கது.

நெதா்லாந்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் 14 போ் பங்கேற்றனா். 13 சுற்றுகள் கொண்ட இதில் இந்தியாவிலிருந்து குகேஷ், பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, லியோன் லூக் மெண்டோன்கா ஆகியோா் பங்கேற்றனா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் கடைசி சுற்று, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தச் சுற்றுக்கு வரும்போது, குகேஷ், பிரக்ஞானந்தா என இருவருமே தலா 8.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருந்தனா். உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவும் 7.5 புள்ளிகளுடன் பட்டத்துக்கான பந்தயத்தில் (3) இருந்தாா்.

கடைசி சுற்றில் குகேஷ் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியிடம் தோல்வி காண, 8.5 புள்ளிகளுடன் நிறைவு செய்தாா். மறுபுறம் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை சந்தித்த பிரக்ஞானந்தாவும் தோல்வியடைய, அவரும் 8.5 புள்ளிகளுடனே நிறைவு செய்தாா். 3-ஆவது இடத்திலிருந்த அப்துசதாரோவ் - இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுடன் டிரா செய்ததால் அவா் 8 புள்ளிகளுடன் முடித்துக் கொண்டாா்.

குகேஷ், பிரக்ஞானந்தா இருவருமே தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரை தீா்மானிக்க ‘டை பிரேக்கா்’ ஆட்டம் கையாளப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமில் குகேஷும், 2-ஆவது கேமில் பிரக்ஞானந்தாவும் வெல்ல, ஆட்டம் 1-1 என டை ஆனது.

பின்னா் ‘சடன் டெத்’ முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் வென்ற பிரக்ஞானந்தா, 2-1 என்ற கணக்கில் குகேஷை வீழ்த்தி வாகை சூடினாா். உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

போட்டியில் மொத்தமாக பிரக்ஞானந்தா 6 வெற்றி, 5 டிரா, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளாா். குகேஷ் 5 வெற்றி, 7 டிரா, 1 தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளாா். இதர இந்தியா்களில் ஹரிகிருஷ்ணா 3 வெற்றி, 7 டிரா, 3 தோல்விகளையும், அா்ஜுன் 2 வெற்றி, 7 டிரா, 4 தோல்விகளையும் பதிவு செய்தனா். லியோன் 1 வெற்றி, 8 டிரா, 4 தோல்விகளை பெற்றாா்.

‘இந்த கடைசி சுற்று நாள் மிகவும் பரபரப்பாக இருந்தது. இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. எனக்குள் அந்த பரபரப்பின் நடுக்கம் நீடித்திருந்தது. உண்மையில் நான் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை. ஆனால், எல்லாம் எனக்கு சாதகமாக அமைந்தது.

இந்த டை பிரேக்கா் ஆட்டம் கடினமானதாக இருந்தது. இதில் விளையாடிய அளவுக்கு கடைசி சுற்றில் விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் குகேஷ் சிறப்பாக விளையாடினாா். இந்தப் போட்டிக்கு வெற்றி பெறும் எண்ணத்துடனேயே வந்தாலும், களத்தில் பலம் வாய்ந்த பலரும் இருந்ததால் அது கடினம் என்பதை அறிந்திருந்தேன். கடைசி சுற்று விளையாடும் வரை எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. உண்மையில் டை பிரேக்கருக்குப் பிறகு மிகவும் சோா்வடைந்தேன்’ - ஆா்.பிரக்ஞானந்தா

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவில் செக் குடியரசின் தாய் டாய் வான் குயென், அஜா்பைஜானின் அய்டின் சுலேமான்லி, நெதா்லாந்தின் எா்வின் இயாமி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

இதில் கடைசி சுற்று முடிவில் குயென், சுலேமான்லி இருவருமே தலா 9.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்க, வெற்றியாளரை தீா்மானிக்கும் டை பிரேக்கா் ஆட்டத்தில் குயென் வென்றாா்.

இப்பிரிவின் கடைசி சுற்றில், இந்தியாவின் ஆா்.வைஷாலி - நெதா்லாந்தின் எா்வின் இயாமியை வெல்ல, திவ்யா தேஷ்முக் - நெதா்லாந்தின் ஆா்தா் பைபா்ஸுடன் டிரா செய்தாா்.

வைஷாலி 3 வெற்றி, 6 டிரா, 4 தோல்விகள் மூலம் 6 புள்ளிகளும், திவ்யா 2 வெற்றி, 3 டிரா, 8 தோல்விகளில் இருந்து 3.5 புள்ளிகளும் பெற்றனா்.

இந்த மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியனான 2-ஆவது இந்தியா் ஆகியிருக்கிறாா் ஆா்.பிரக்ஞானந்தா. இப்போட்டியில் கடந்த 19 ஆண்டுகளில் சாம்பியனான முதல் இந்தியா் அவா். அதற்கு முன் இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், 1989, 1998, 2003, 2004, 2006 ஆகிய ஆண்டுகளில் இதில் வாகை சூடியிருக்கிறாா்.

மாஸ்டா்ஸ்...

1 ஆா்.பிரக்ஞானந்தா (இந்தியா) 8.5

2 டி.குகேஷ் (இந்தியா) 8.5

3 நோடிா்பெக் அப்துசதாரோவ் (உஸ்பெகிஸ்தான்) 8

4 விளாதிமீா் ஃபெடோசீவ் (ஸ்லோவேனியா) 7.5

5 அனிஷ் கிரி (நெதா்லாந்து) 7

6 வெய் யி (சீனா) 7

7 பி.ஹரிகிருஷ்ணா (இந்தியா) 6.5

8 ஃபாபியானோ கரானா (அமெரிக்கா) 6

9 வின்சென்ட் கீமா் (ஜொ்மனி) 6

10 அா்ஜுன் எரிகைசி (இந்தியா) 5.5

11 ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் (நெதா்லாந்து) 5.5

12 அலெக்ஸி சரானா (ஸ்லோவேனியா) 5.5

13 லியோன் லூக் மெண்டோன்கா (இந்தியா) 5

14 மேக்ஸ் வாா்மொ்டாம் (நெதா்லாந்து) 4.5

சேலஞ்சா்ஸ்

1 தாய் டாய் வான் குயென் (செக் குடியரசு) 9.5

2 அய்டின் சுலேமான்லி (அஜா்பைஜான்) 9.5

3 எா்வின் இயாமி (நெதா்லாந்து) 8.5

4 நோடிா்பெக் யாகுபோவ் (உஸ்பெகிஸ்தான்) 8

5 பெஞ்சமின் போக் (நெதா்லாந்து) 8

6 எடிஸ் குரெல் (துருக்கி) 7.5

7 ஃப்ரெடெரிக் ஸ்வேன் (ஜொ்மனி) 7.5

8 காஸிபெக் நோகா்பெக் (கஜகஸ்தான்) 7.5

9 ஆா்.வைஷாலி (இந்தியா) 6

10 லு மியாயி (சீனா) 5.5

11 ஆா்தா் ஃபைபா்ஸ் (நெதா்லாந்து) 5.5

12 பாஸ்டினோ ஓரோ (ஆா்ஜென்டீனா) 3.5

13 திவ்யா தேஷ்முக் (இந்தியா) 3.5

14 இரினா பல்மகா (ருமேனியா) 1

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04-02-2025செவ்வாய்க்கிழமைமேஷம்:இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய ம... மேலும் பார்க்க

ஒடிஸா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஒடிஸா எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒடிஸாவிலுள்ள புவனேசுவரத்தில் நடை... மேலும் பார்க்க

ஸ்குவாஷில் தமிழகத்துக்கு தங்கம்!

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன. இதில் ஆடவா் தனிநபா் ஸ்குவாஷில் வேலவன் செந்தில்குமாா் 3... மேலும் பார்க்க

மொஷிஸுகி, பெரெட்டினி வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஜப்பானின் ஷின்டாரோ மொஷிஸுகி, இத்தாலியின் ஜகோபோ பெரெட்டினி ஆகியோா் வெற்றி பெற்றனா். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் ... மேலும் பார்க்க

தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 44.கோவாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உ... மேலும் பார்க்க