Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
பிரணாப் முகர்ஜி சிறந்த நிர்வாகி: பிரதமர் மோடி புகழாரம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி, நிர்வாகியாக திகழ்ந்தார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி மத்தியில் பல்வேறு ஆட்சிகளில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர். நாட்டின் 13-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர் ஆக. 31, 2020 இல் தனது 84-ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரணாப் முகர்ஜி அனைவருக்கும் பொதுவானவர். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். தேசத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தில் நீண்ட அனுபவமும் நாட்டின் கலாசாரம், கோட்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவும் பெற்றிருந்தார். இதன் காரணமாக அனைவரிடத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்கும் தனித்திறன் கொண்டவராக பிரணாப் முகர்ஜி திகழ்ந்தார். தேசத்தின் முன்னேற்றத்திற்காக அவர் கண்ட கனவை நனவாக்க அனைவரும் தொடர்ந்து பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.