தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்!
பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயகாவின் தில்லி பயணத்தின்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக, அடுத்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு வர உள்ளார். மேலும் அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும் அவர் கூறினார்.
அதிபராக பதவியேற்று திசாநாயகாவின் முதல் இந்தியப் பயணத்திலேயே இருதரப்பு உறவு குறித்தும், பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையின்போது சம்பூர் சூரிய மின் நிலையத்தைத் திறப்பதுடன் கூடுதலாகப் பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.
2023ஆம் ஆண்டில் கிழக்கு திரிகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையத்தைக் கட்ட இலங்கை மின் வாரியமும், இந்தியாவின் அனல்மின் வாரியமும் ஒப்புக்கொண்டன.
தேசிய நலனைப் பேணுவதற்காகப் பணியாற்றும் போது எங்கள் வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் நடுநிலையாக இருப்போம் என்றும் ஹெராத் கூறினார்.
2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை தீவு நாட்டிற்குப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.