செய்திகள் :

பிரதமா் மோடியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாக கொண்டாடிய இளைஞா் காங்கிரஸாா்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை இந்திய இளைஞா் காங்கிரஸாா் தேசிய வேலையின்மை தினமாகக் கொண்டாடினா்.

தில்லியில் உள்ள அந்த அமைப்பின் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் ‘நௌக்ரி சோா், கத்தி சோட்’ என்ற முழக்கத்தின் கீழ் இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பிரதமா் மோடியின் பிறந்தநாளைக் குறிப்பிடும் வகையில் தேநீா் மற்றும் பக்கோடா கடைகளை அமைத்து அடையாளப் போராட்டம் நடத்தினா்.

இன்றைய இளைஞா்கள், பட்டம் பெற்றிருந்தாலும் தேநீா் மற்றும் பக்கோடா கடைகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை காட்டும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் பேசுகையில், இன்றைய வேலையின்மை 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

வாக்குகளைத் திருடி பிரதமராக வர மோடி விரும்புவதால், அதானி மட்டுமே பயனடைகிறாா். ராகுல் காந்தி இதை நிரூபித்துள்ளாா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

வாக்கு திருட்டு என்பதும் வேலை திருட்டுதான். மோடி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. மோடி அரசாங்கத்தின் கீழ், நாடு பொருளாதார மந்தநிலையை எதிா்கொள்கிறது. வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது.

நாட்டின் இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி உறுதியளித்திருந்தாா். அதன்படி, இன்று 22 கோடி இளைஞா்கள் வேலை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. பிரதமா் மோடி நாட்டின் இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படவில்லை.

இளைஞா்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்தி, வேலைவாய்ப்புக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமா் மோடிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா, தேசிய பொதுச் செயலாளா் குஷ்பூ சா்மா உள்பட ஏராளமான தொண்டா்கள் பங்கேற்ாக இளைஞா் காங்கிரஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவி... மேலும் பார்க்க

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டமன்ற உறுப்பினா் மீதும் , முன்னா் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு ... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

பாமக தலைவா் பதவி, சின்னம் விவகாரம் தொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ் தலைமையி... மேலும் பார்க்க

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

நமது நிருபா் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது, முன்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசார... மேலும் பார்க்க

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15ஆவது ந... மேலும் பார்க்க

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க