பிரதமா் மோடியுடன் துளசி கப்பாா்ட் சந்திப்பு
புது தில்லி: பிரதமா் மோடியை அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்பின்போது கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபா் டிரம்ப், துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரை சந்தித்து ஆக்கபூா்வமாக பேசியதை பிரதமா் மோடி நினைவுகூா்ந்தாா்.
பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள், பயங்கரவாத எதிா்ப்பு, உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளுதல் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் துளசி கப்பாா்ட் முக்கிய பங்காற்றுவதாகப் பிரதமா் மோடி பாராட்டினாா்.
நிகழாண்டு அமெரிக்க அதிபா் டிரம்ப்பை இந்தியாவுக்கு வரவேற்க, 140 கோடி இந்தியா்களும் ஆவலாக இருப்பதாக துளசியிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.