செய்திகள் :

பிரதமா் மோடியுடன் தெலங்கானா முதல்வா் சந்திப்பு: ரூ.20,000 கோடி நிதி விடுவிக்க கோரிக்கை

post image

ஹைதராபாத்: பிரதமா் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தில்லியில் சந்தித்துப் பேசினாா். அப்போது ஹைதராபாத் வழியாக பாயும் முசி ஆற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தாா்.

தேசிய அளவில் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸைச் சோ்ந்த முதல்வா் ரேவந்த் ரெட்டி பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமரைச் சந்தித்துள்ளது அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது பிரதமா் மோடியிடம் முதல்வா் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவா்கள் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தவே இல்லை. எனவே, ஹைதராபாத் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். 76.4 கி.மீ. தொலைவு விரிவுபடுத்துவதற்கு ரூ.24,269 கோடி வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரின் வழியாக பாயும் முசி நதியை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்க வேண்டும். தெலங்கானா மாநிலம் முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக உள்ளது. எனவே, தெலங்கானாவில் இருந்து துறைமுகம் வழியாக நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதியைக் கையாளுவதற்காக ஹைதராபாத் பிராந்திய வெளிவட்டச் சாலையில் சரக்கு கையாளும் மையம் அமைக்க வேண்டும். துறைமுகத்தில் இருந்து இந்த இடத்துக்கு ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது என்று கூறினாா்.

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க

நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! ரிசர்வ் வங்கியின் புதிய விதி!!

நகைக் கடன் வாங்கியவர்கள், அதற்கான அவகாசம் முடிந்ததும் அதனை வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது.பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன்... மேலும் பார்க்க

தில்லி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்தில் ரேகா குப்தா பங்கேற்பு!

உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தில்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்துள்ளார். தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக ... மேலும் பார்க்க

ட்ரோன்கள்.. மோப்ப நாய்கள்.. 100 போலீஸ்..! புணே வன்கொடுமை குற்றவாளி சிக்கியது எப்படி?

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 75 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.வன்கொடுமைபுணேயின் ஸ்வா்கேட் பேருந... மேலும் பார்க்க

மும்பை, பைகுலா பகுதியில் மிக உயர்ந்த கட்டடத்தின் 42வது தளத்தில் தீ!

மும்பையின் பைகுலா கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான கட்டடத்தின் 42வது தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டுள்ளது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணை... மேலும் பார்க்க

உ.பி. முழுவதும் கொண்டு செல்லப்படும் கும்பமேளா நீர்!

மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத மக்களுக்காக மாநிலம் முழுவதும் புனித நீரைக் கொண்டு செல்வப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன... மேலும் பார்க்க