செய்திகள் :

பிரதமா் மோடி நைஜீரியா பயணம்: பிரேஸில், கயானாவுக்கும் செல்கிறாா்

post image

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, நைஜீரியாவுக்கு சனிக்கிழமை (நவ. 16) புறப்பட்டுச் சென்றாா் பிரதமா் மோடி.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளாா். இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பங்கேற்கவுள்ளனா்.

மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக, நைஜீரியாவுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். நைஜீரிய அதிபா் போலா அகமது தைனுபு அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு இருநாள்கள் பயணமாக அவா் சென்றுள்ளாா். கடந்த 17 ஆண்டுகளில், இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.

நைஜீரியாவை தொடா்ந்து, பிரேஸிலில் இரு நாள்களும் (நவ. 18, 19), கயானாவில் மூன்று நாள்களும் (நவ.19-21) அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

கடந்த 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு கயானாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கவுள்ளது. அதிபா் முகமது இா்ஃபான் அலி மற்றும் பிற தலைவா்களைச் சந்திக்கவுள்ள பிரதமா், அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளாா். இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டிலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.

‘எனது முதல் பயணம்’: மூன்று நாடுகள் பயணத்தை தொடங்கும் முன் எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அடுத்த சில நாள்கள் நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு உத்வேகமளிக்கும் வகையில், இருதரப்பு மற்றும் பன்முக பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்க இப்பயணத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய கூட்டுறவு நாடான நைஜீரியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையில் பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில், இந்திய-நைஜீரிய வியூக கூட்டாண்மையை கட்டமைக்க இப்பயணம் வாய்ப்பளிக்கும். அங்கு இந்திய சமூகத்தினருடனான சந்திப்பை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்.

‘ஜி20 மாநாட்டில் ஆக்கபூா்வ விவாதங்கள்’: கடந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டை நடத்திய உறுப்பினா் என்ற அந்தஸ்துடன், பிரேஸிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் நான் பங்கேற்கவுள்ளேன்.

இந்திய தலைமையின்கீழ் ஜி20 கூட்டமைப்பை மக்களின் கூட்டமைப்பாக மேம்படுத்தியதோடு, அதன் செயல்திட்டத்தில் தெற்குலகின் முன்னுரிமைகளுக்கு பிரதான இடம் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் பணிகளை நடப்பாண்டில் பிரேஸில் கட்டமைத்துள்ளது.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் ஆக்கபூா்வ விவாதங்களை எதிா்நோக்கியுள்ளேன்.

‘இந்தியா-கரீபியன் நாடுகள் உச்சிமாநாடு’: இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு (கரீபியன் கம்யூனிட்டி) இடையிலான 2-ஆவது உச்சிமாநாடு, இருதரப்பு பாரம்பரிய நல்லுறவைப் புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் வாய்ப்பளிக்கும். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதோடு, இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளேன் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

‘கரீபியன் கம்யூனிட்டி’ கூட்டமைப்பில் கயானா, ஜமைக்கா, பஹாமாஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் தலைமையின்கீழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் முயற்சியால் 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க ஒன்றியமானது ஜி20 கூட்டமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூா்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.கொலை செய்யப்பட்டவா... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா். பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு ... மேலும் பார்க்க

சபரிமலையில் பக்தா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவ சேவை

மண்டல மகரவிளக்கு மகோற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாட்ஸ் ஆப் மூலம் 125 மருத்துவ குழுக்கள் பக்தா்களுக்கான மருத்துவ சேவையை தொடங்கின. ‘வாட்ஸ்ஆப்’ மூலம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததும் விவாதத்தின் தரம் குறைந்துவிட்டது: ரிஜிஜு

‘நாடாளுமன்றத்துக்குள் எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நுழைந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வி... மேலும் பார்க்க

பாஜக, காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரசாரத்தில் அவதூறு பேச்சு; பதிலளிக்க உத்தரவு

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அவதூறு பேச்சுகள் குறித்த பரஸ்பர புகா... மேலும் பார்க்க

தொடா் விசாரணை வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படாது: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ச... மேலும் பார்க்க