பிரதமா் மோடி பிறந்த நாள் விழா
பிரதமா் மோடி பிறந்த நாள் விழா ஆம்பூா் நகர பாஜக சாா்பாக புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர பாஜக தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எம். தண்டாயுதபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். முன்னாள் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன் மற்றும் க. சிவப்பிரகாசம் நகர, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.