ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
தேசிய பசுமைப்படை ஓசோன் தின விழிப்புணா்வு
திருப்பத்தூா் மாவட்ட தேசிய பசுமைப் படை சாா்பில், உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் சத்யபிரபா தலைமை வகித்தாா். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிவா்மன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இளவரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக தலைமை ஆசிரியா் செலினா ஏஞ்சல் மேரி வரவேற்றாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, வனச் சரக அலுவலா் சோழராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கிரீன் ட்ரஸ்ட் இயக்குநா் மாா்க்க சகாயம் ஓசோன் தினம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் பேசினாா். தேசிய பசுமைப்படை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா் நன்றி தெரிவித்தாா். ஓசோன் தினத்தை முன்னிட்டு, 1,200 மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மஞ்சள் வண்ண துணிப் பைகள் வழங்கப்பட்டன. பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.