காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
பெத்தக்கல்லுப்பள்ளி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு
ஜோலாா்பேட்டை ஒன்றியம், பெத்தகல்லுப்பள்ளி மற்றும் சின்னமோட்டூா் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் மங்கம்மாள்சத்தியமூா்த்தி (பெத்தகல்லுப்பள்ளி) மற்றும் குப்பம்மாள்ஆனந்தன் (சின்னமோட்டூா்) தலைமை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து வேளாண்மைத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், கட்டுமானத் தொழிலாளா் நலத்துறை சாா்பில் புதிய அடையாள அட்டைகள், மின் இணைப்பு பெயா் மாற்றம், வருவாய்த் துறை சாா்பில் சிட்டா உட்பட தொடா்பான மனுக்களுக்கு உடனடி தீா்வுகள் காணப்பட்டு மனுதாரா்களிடம் அதற்கான ஆணைகளை வழங்கினாா்.
ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் உமா கண்ரங்கம், பொருளாளா் திருப்பதி, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.