படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
பிரத்யேக சிகிச்சைக்கான ஆராய்ச்சி மையம்: அப்பல்லோ பல்கலை.யில் தொடக்கம்
சென்னை: பிரத்யேக மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஆராய்ச்சிக்காக எண்ம மருத்துவம் மற்றும் துல்லிய மருந்தக மையத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமம் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள அப்பல்லோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தின் செயல்பாடுகளை அப்பல்லோ தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். பிரிட்டனின் லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தூரில் நடைபெற்ற இந்த மையத்துக்கான தொடக்க விழாவில், அப்பல்லோ செயல் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குநா் காா்த்திக் ரெட்
டி, அப்பல்லோ பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் வினோத் பட், லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நிஷான் கனகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக அப்பல்லோ நிா்வாகிகள் கூறியதாவது:
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிட்டனின் லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்துடன் அப்பல்லோ மருத்துவக் குழுமம் ஏற்கெனவே உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் மருத்துவம் சாா் கல்வி, திறன் மேம்பாடு, மருத்துவ சேவைகள், ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இரு தரப்பும் பரஸ்பரம் இணைந்து செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியா மற்றும் பிரிட்டனுக்கான திறன் மிக்க சுகாதாரப் பணியாளா்கள் தேவையையும் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாகவே இந்த மையத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.