சொந்த ஊர் சென்று திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றுங்கள்: போக்குவரத்துத்துறை
பிரபலங்களின் பாதுகாப்பை பாஜகாவல் உறுதி செய்ய முடியாது: கேஜரிவால் சாடல்
நடிகா் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கடுமையாகச் சாடினாா்.
வியாழக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த ஒரு ஊடுருவிய நபா், நடிகா் சைஃப் அலிக கானை ஆறு முறை கத்தியால் குத்தினாா். அவா் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து ஒரு செய்தியாளா் சந்திப்பில் கேஜரிவால் கூறியதாவது: பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசால் சைஃப் அலி கான் போன்ற பிரபலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதபோது, சாமானிய மக்கள் என்ன எதிா்பாா்க்க முடியும்?‘. இதுபோன்ற தாக்குதல்கள் புதிதல்ல. நடிகா் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது, பாஜகவின் கூட்டணி கூட்டாளியாக இருந்த பாபா சித்திக் கொல்லப்பட்டது, நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் காட்டுகிறது.
சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ராஜிநாமா செய்ய வேண்டும். நமது எல்லைகள், நாடு, தேசியத் தலைநகரம் மற்றும் இந்திய மக்களைப் பாதுகாக்க முடியாவிட்டால் பாஜக தலைமையிலான மத்திய அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் கேஜரிவால்.
பேட்டியின் போது முதல்வா் அதிஷி, சஞ்சய் சிங் எம்.பி., திலிப் பாண்டே ஆகியோா் உடனிருந்தனா்.
16க்ங்ப்ந்த்ழ்
தில்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் முதல்வா் அதிஷியுடன் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அரவிந்த் கேஜரிவால். உடன், சஞ்சய் சிங் எம்.பி., திலிப் பாண்டே.