செய்திகள் :

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!

post image

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் உடல்நலக்குறைவால் காலமானார்.

1970 மற்றும் 1980 ஆண்டுகளில் அங்குர், நிஷாந்த் மற்றும் மந்தன் போன்ற திரைப்படங்களின் மூலம் இந்திய இணை சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற மூத்த திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானர். அவருக்கு வயது 90.

ஷியாம் பெனகல் காலமானதை அவரது மகள் பியா தெரிவித்தார். மக்களுக்கான பிரச்சினைகளை படமாக்குவதில் மிகவும் புகழ்பெற்றவரான ஷியாம் பெனகல் பல ஆண்டுகளாக சிறுநீரக நோயால் மும்பை வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

மரணமடைந்த பெனகலுக்கு நீரா பெனகல் என்ற மனைவியும் பியா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது 90வது பிறந்தநாளை கடந்த 10 நாள்களுக்கு முன்பு டிசம்பர் 14 அன்று கொண்டாடினார்.

பெனகல் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார். அவரது படங்களில் பூமிகா, ஜூனூன், மண்டி, சூரஜ் கா சத்வான் கோடா, மம்மோ மற்றும் சர்தாரி பேகம் ஆகியவை ஹிந்தி சினிமாவில் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

தி மேக்கிங் ஆஃப் தி மகாத்மா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: தி ஃபார்காட்டன் ஹீரோ முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் ஆகிய வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.24-12-2024 செவ்வாய்க்கிழமைமேஷம்:இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மே... மேலும் பார்க்க

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடா்: பும்ராவின் பௌலிங்கை எதிா்கொள்ளத் தயாா்!

இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் பௌலிங்கை எதிா்கொள்ளத் தகுந்த திட்டத்துடன் தயாா்நிலையில் இருப்பதாக, ஆஸ்திரேலிய இளம் பேட்டா் சாம் கான்ஸ்டஸ் திங்கள்கிழமை கூறினாா்.பாா்டா் - க... மேலும் பார்க்க

தேசிய துப்பாக்கி சுடுதல்: சாஹு துஷாா் மனே சாம்பியன்

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீரா் சாஹு துஷாா் மனே, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.மகாராஷ்டிரத்தை சே... மேலும் பார்க்க

தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: திண்டுக்கல்லில் தொடக்கம்

43-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை தொடங்கியது.திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திர... மேலும் பார்க்க

தேசிய மகளிா் கால்பந்து: கோப்பையை தக்கவைத்த மணிப்பூா்

சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது. இறுதி ஆட்டத்தில் மணிப்பூா் வெற்றிக்காக, ஆசெம் ரோஜா தேவி 55-ஆவது ... மேலும் பார்க்க

தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல்: பெங்களூரு மாணவா்கள் சிறப்பிடம்

தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் பெங்களூரு மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா். சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் நடைபெற்று வரும் இப்போ... மேலும் பார்க்க