செய்திகள் :

`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!

post image

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரிக்குடிசை கிராமத்தில் 'கள் விடுதலை மாநாடு' நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

கவிஞர் அறிவுமதி சீமான் தமிழகத்தின் கருணா என விமர்சித்திருக்கிறாரே ?

``தமிழகத்தில் ஒரு கருணாதான். அவர் கருணாநிதி. இன்றைக்கு நான் மட்டும் போராடும்போது என்னை கருணா எனது விமர்சிப்பது ஏன் ? ஈழத்திற்கு உணவு, மருந்து பொருள்கள் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி. இது அறிவுமதி, சுபவீர பாண்டியன், கொளத்தூர் மணி ஆகியோர்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?

சீமான்

ஈரோடு இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கிறது ?

``களம் எங்களுக்கானது. நான் ஒருவன்தான் போட்டியிடுகிறேன். ஆனால், பல அமைச்சர்களை களமிறக்கியும், கூட்டணி கட்சிகள் இருந்தும் வாக்குக்கு காசு கொடுப்பது ஏன் ? பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள் பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியார் தாலி அடிமை சின்னம் என்றும் அதனை அறுத்து எரியவேண்டும் என்றும், கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம் என்றும் பேசியுள்ளார். பெண்கள் கருப்பையை அறுத்து எரிய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக்கூடாது என்று கூறுவதைப் போன்றது என்று பெரியார் பேசியதைக் கூறி வாக்கு கேளுங்களேன்.

ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யார் ? ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு இருந்தவர்கள் யார் ? பாரதிய ஜனதா கட்சியின் தாய்க் கழகமான ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தவர் யார்? பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தவர்கள் யார்? திராவிடம் அதிகாரத்திற்கு போக, அரியணை ஏற பீகார் பார்ப்பனன் பிரசாந்த் கிஷோர் பாண்டே தேவைப்படுகிறார். இப்போது ராபின் சர்மாவை கூட்டி வந்திருக்கிறார்கள்.  அவர் ஒரு ஆரியர். நீங்கள் மேலே வருவதற்கு அவன் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. அவன் மூளை தேவைப்படுகிறது. ஆனால் எங்களை சங்கி எனது விமர்சனம் செய்கிறார்கள்”

சீமான்

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களின் தந்தை பெயரில் சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

``ஆரிய கூலி, ஆரியப் பற்று, ஆரியக் கூட்டாளி. அவர் நாடகம் போடும்போது முதல்வர் படமும், உதயநிதி ஸ்டாலின் படம் உள்ளது”

 ஐ.ஐ.டி இயக்குநர் கோமியம் குறித்து தெரிவித்த கருத்து குறித்து…?

``மருத்துவமனைகளுக்கு லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். பைத்தியங்களிடம் நாடும், மக்களும் சிக்கி உள்ளனர். மாட்டுப் பால் குடிப்பவன் இடை சாதி. மாட்டுக் கறி தின்பவன் கீழ் சாதி. மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்ந்த சாதி இதுதான் இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான்”

சீமான்

நீங்கள் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகியிருக்கிறதே ?

``அதை விடுங்கள்….” என்றார்.

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க ... மேலும் பார்க்க

America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? - காரணம் என்ன?

குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமியும் அதிபர... மேலும் பார்க்க

Doctor Vikatan: 4 கிலோ எடையில் பிறந்த குழந்தை... பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வருமா?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை 4 கிலோ எடையில் பிறந்தது. இது நார்மல் எடைதானா... குழந்தைகள் அதிக எடையில் பிறப்பது ஏன்... இதனால் பிற்காலத்தில் அவர்கள் உடல் பருமன் பிரச்னை... மேலும் பார்க்க

``காலாவதி பதவியும், விலகல் கடிதமும்'' -வேலூரில் பாஜக மோதல்... பின்னணி என்ன?

பா.ஜ.க-வில், வேலூர் மாவட்டத்திற்கான புதிய தலைவராக தசரதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இதற்கான அறிவிப்பை மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி நேற்று மாலை வெளியிட்டார். இதனிடையே, தசரதன் நியமனத்திற்க... மேலும் பார்க்க

IIT இயக்குநர் சர்ச்சை கருத்து: ``கல்வி நிலையங்கள் காவி மயமாகுவதை..." -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை!

மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம... மேலும் பார்க்க

Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..!

'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று ஆரம்பித்து 'மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்' என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது. இது 170 மில்லியன் அமெ... மேலும் பார்க்க