செய்திகள் :

'பிரிக்ஸ் நாடுகள் மீதான தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் நிற்கும்' - ட்ரம்பிற்கு புதின் பதில்!

post image

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அவரை உறுத்தும் விஷயங்களில் ஒன்று, 'பிரிக்ஸ்'.

பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும்... அமெரிக்க டாலருக்கு எதிராக, அவர்களது நாணயத்தை கொண்டு வருவார்கள் என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், இந்த நாடுகளின் மீது 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தி வருகிறார்.

மோடி - புதின் - ஜி ஜின்பிங்
மோடி - புதின் - ஜி ஜின்பிங்

புதின் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது...

"முக்கிய கட்டமைப்பு திட்டங்களுக்கான கூடுதல் வளங்களைத் திரட்ட ரஷ்யாவும், சீனாவும் தனி கவனம் செலுத்தி வருகின்றன.

மேலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் நிறைந்த சவால்களுக்கு எதிராக பிரிக்ஸை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றுபட்டு நிற்கின்றது.

உலக அளவிலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக மாஸ்கோவும் பெய்ஜிங்கும் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும்" என்று கூறியுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains

எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி என்ன செய்கிறார்? செப் 5-ல், அதிமுகவில் பெரும் புயல் காத்திருக்கிறது என கூறப்படுகின்றது.மறுபுறம், அன்புமணியை நீக்கும் ... மேலும் பார்க்க

`உங்களுடன் ஸ்டாலின்' ஆற்றில் மிதந்த மக்களின் மனுக்கள் - மூழ்குகிறதா விசாரணை?

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில், காவல்துறை விசாரணை மந்தமாக நடந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.திருப்புவனம் என்றாலே திமுக அரசுக்கு திருகுவலிதான் போல..!தமிழக மக... மேலும் பார்க்க

GST 2.0: பீடி, குட்கா, புகையிலை.. இன்னும் என்னென்ன பொருள்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது?

நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், சாதாரண மக்களின் முக்கியத் தேவைப் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது.இன்னொரு பக்கம், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் 'பாவப் பொருட்கள்' என்று அழைக்கப்படுக... மேலும் பார்க்க

GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி அறிவித்த ‘தீபாவளி கிஃப்ட்’ நேற்று வெளிவந்துவிட்டது.ஆம்... ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ... மேலும் பார்க்க