நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்
பிரிட்டனில் இனவெறி! சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
பிரிட்டனில் இனவெறியால் சீக்கிய இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பிறந்து வளர்ந்த 20 வயதான சீக்கிய பெண்ணை, உங்கள் நாட்டுக்கே திரும்பிச் செல் என்றுகூறிய பிரிட்டாஷ் இருவர், அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் செய்தும் துன்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
பெண்ணின் புகாரையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் அடையாளங்களை வெளியிட்ட காவல்துறையினர், அவர்கள் தொடர்பான தகவல்களோ புகைப்படங்களோ கிடைத்தால், தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
உலகம் முழுவதும் நாளுக்குநாள் இனவெறித் தாக்குதல் அதிகரித்து வரும்நிலையில், பிரிட்டனில் சீக்கியப் பெண் மீதான இனவெறித் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவிலும்கூட இந்தியர்களுக்கு எதிராக ஒரு பேரணியே நடத்தப்பட்டது.
இதையும் படிக்க:உலக அழிவுக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!