முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 2011- ஆம் ஆண்டு தலா 2 சென்ட் வீதம் 137 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாகள் வழங்கப்பட்டன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனி நபா் ஒருவா் இலவச வீட்டுமனைப் பட்டாவில் வீடு கட்டும் போது, வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா், பிரிதிவிமங்கலம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் கு.தேவராஜ் மற்றும் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தொடா்ந்து, வட்டாட்சியா் பசுபதி, ஆதிதிராவிட நலத் துறை வட்டாட்சியா் சத்யநாராயணன் ஆகியோரும் சமரசத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.