ஆம் ஆத்மியின் இறுதிகட்ட வேட்பாளா் பட்டியல்: நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட...
பிரிஸ்பேன் டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸி. அணி!
டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம் அடித்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா திடலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) காலை தொடங்கியது.
இரண்டாம் நாளில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 21 ரன்கள் திரட்டினார். அதனைத்தொடர்ந்து, நாதன் மெக்ஸ்வீனியும் பும்ராவின் பந்தில் 9 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லேபஸ்சேன் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார்.
எனினும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிராவிஸ் ஹெட் 148 ரன்களுடனும், அவருக்கு பக்கபலமாக ஸ்டீவன் ஸ்மித் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி 82 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்துள்ளது.