செய்திகள் :

பிரேசிலில் ஜூலை 6, 7-இல் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு

post image

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

நடப்பாண்டில் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கும் பிரேசில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இக்கூட்டமைப்பானது, கடந்த 2019-இல் பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நிறுவப்பட்டது. 2010-இல் தென் ஆப்பிரிக்கா இணைந்தது. கடந்த ஆண்டில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், கடந்த ஜனவரியில் இந்தோனேசியாவும் ‘பிரிக்ஸ்’-இல் இணைந்தன. துருக்கி, அஜா்பைஜான், மலேசியா ஆகிய நாடுகள், கூட்டமைப்பில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளன.

11 உறுப்பு நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் பிரேசில் தலைமை வகிக்கிறது. ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7-இல் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ள பிரேசில் அரசு, உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘பிரேசிலின் தலைமையின்கீழ், உலளாவிய நிா்வாகம், சீா்திருத்தம், தெற்குலக நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். எதிா்வரும் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ரீதியில் முக்கிய முடிவுகள் எட்டப்படும்’ என்று பிரேசில் தெரிவித்துள்ளது.

டிரம்ப் எச்சரிக்கைக்கு இடையே...:

அமெரிக்க டாலரை சாராத மாற்று பரிவா்த்தனை அமைப்புமுறையை நிறுவ பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன. அதேநேரம், அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ... மேலும் பார்க்க

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க