என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
பிரேமலு பிரபலங்கள் நிறைந்த ’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீடு!
‘ப்ரோமான்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘ப்ரோமான்ஸ்’.
காணாமல் போன சகோதரனைக் கண்டுபிடிக்க 3 இளைஞர்கள் இணையும் நகைச்சுவையான கதைக்களத்தைக் கொண்ட இப்படம் பிப்.14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த ‘பிரேமலு’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் மற்றும் ஷியாம் மோஹன் மீண்டும் இணைந்த இந்தப் படமும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் உழைப்பாளர் தினமான நாளை (மே.1) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒசகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!